zetaads

யோகா என்பது நமது உடலையும் மனதையும் புத்துணர்ச்சியோடு வைக்கும் பயிற்சி ஆகும். ஆனால் காலம் நேரமும் ஓடும் இவ்வாழ்க்கையில் யோகா பயிற்சி என்பது இப்பொழுது எல்லாம் கைவிடப்பட்டுள்ளது.
நீங்கள் காலையில் எழுந்து உங்கள் சோம்பல் தனத்தையும் மீறி யோகா செய்வதற்கென உடை அணிந்து அதை மேற்கொள்ளுவது கடினமாக இருக்கிறது அல்லவா? அதற்கு தான் நாங்கள் உங்களுக்கு உதவப் போகிறோம். எல்லாருக்கும் தெரியும் யோகா நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.5 Yoga Poses Before Getting Out Of Bed
ஆனால் அதை எத்தனை பேர் செய்து பலன் பெறுகின்றனர். சில பேர் மதத்தின் அடிப்படையில் யோகா பயிற்சிகள் மேற்கொள்ளுகின்றன. இன்னும் சில பேர் ஒரு மாதம் காலம் செய்து விட்டு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் கொஞ்ச காலம் தொடர்கின்றனர்.
ஆனால் நீங்கள் காலையில் உங்கள் படுக்கை விரிப்பில் இருந்த படியே இந்த யோகா பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இதனால் உங்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். யோகா என்பது வெறும் எடையை மட்டுமே குறைப்பதற்காக செய்வதில்லை. இது ஆஸ்துமா, முதுகுவலி மற்றும் மூச்சு விடுதல் பிரச்சினை போன்ற உடல் சார்ந்த நிறைய பிரச்சினைகளை சரிபண்ணுகிறது.
அப்படிப்பட்ட அற்புதமான பலனை தரும் சில யோகா பயிற்சிகளை இக்கட்டுரையில் காண்போம்.. 1 நடராஜாசனா (நடனமாடும் நிலை) :

1 நடராஜாசனா (நடனமாடும் நிலை) :

நட-நடனம், ராஜா - அரசன், ஆசனம் - யோகா என்று பொருள். இது ஒரு சிறந்த ஆசனம். இந்த ஆசனம் தண்டுவடத்திற்கு வலிமையும் நெகிழ்வுத்தன்மையும் தருகிறது. மேலும் சீரண மண்டலத்திற்கு உதவி புரிந்து சீரண சக்தியை மேம்படுத்துகிறது. எனவே இதுவே நீங்கள் முதலில் செய்ய வேண்டிய ஆசனமாகும்.
செய்முறை :
தரை விரிப்பில் முதுகுப்பகுதி தரையில் படும்படி படுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது உங்கள் வலது முழங்காலை மடக்கி இடது முழங்காலின் மேல் வைக்க வேண்டும். வலது பாதம் சற்று வெளிப்புறமாக இருக்குமாறு வைக்க வேண்டும். பக்கவாட்டில் கைகளை தோள்பட்டையின் உயரத்திற்கு சமமாக நீட்ட வேண்டும்.
மூச்சை உள்ளே இழுக்க வேண்டும். மூச்சை வெளியே விடும் போது தோள்பட்டை மற்றும் இடுப்புக்கு இடைப்பட்ட பகுதியை அப்படியே இடது புறம் திருப்பி மற்றும் தலையை வலது பக்கம் திருப்பி வலது தோள்பட்டையை பார்க்க வேண்டும்.
தோள்பட்டை களை தரையில் படும்படி செய்து பின்னர் வலது தொடையை தரையில் படும்படி செய்ய வேண்டும். மேலும் இடது கையை வலது தொடையின் மீது வைத்து கீழே படும் படி செய்ய வேண்டும்.
இதே நிலையில் 3-4 மூச்சுப்பயிற்சி அல்லது உங்களால் முடிகின்ற அளவு வரை செய்ய வேண்டும்.
பிறகு மூச்சை வெளியிட்டு ரிலாக்ஸ் ஆகிக் கொள்ளுங்கள்.
இதே பயிற்சியை அடுத்த பக்கம் மாற்றி செய்யவும்.
பயன்கள் :
தண்டுவடத்தின் நெகிழ்வுத்தன்மையும் வலிமையையும் அதிகரிக்கிறது.
இது விலா எலும்புகள் மற்றும் நுரையீரலுக்கு நல்ல பயிற்சியாகும்.
இது பெருங்குடல் செயலை நன்றாக்குகிறது. எனவே இதை காலையில் செய்தால் நல்லது.
குடலியக்கம், சிறுநீர்ப் பை போன்றவற்றின் செயலை சீராக்குகிறது.
சீரண சக்தியை மேம்படுத்துகிறது
மனது மற்றும் மூளையை ரிலாக்ஸ் ஆக்குகிறது. சுஹாசனா (குறுக்கு கால் போடும் நிலை) :

சுஹாசனா (குறுக்கு கால் போடும் நிலை) :

இது ஒரு எளிதாக செய்யும் யோகா ஆகும். உங்களது படுக்கையில் உட்கார்ந்து கொண்டு குறுக்கு கால் போட்டு செய்யும் ஒரு எளிய நிலை ஆகும். சுஹா என்றால் சந்தோஷம் என்று பொருள்.
செய்முறை :
முதலில் உங்கள் கால்களின் கோணங்கள் சரியாக இருக்குமாறு குறுக்கு கால் போட்டு உட்கார்ந்து கொள்ள வேண்டும்.
மெல்ல கண்களை மூடிக் கொண்டு காற்றில் கேட்கும் இசையை போல உங்களது மூச்சை மெதுவாக இழுக்க வேண்டும்.
மூச்சை நீங்கள் உள்ளே இழுத்தல் உங்கள் தண்டுவட நீட்சிக்கும், வெளியிடுதல் தண்டுவடம் ரிலாக்ஸ் ஆவதற்கும் உதவுகிறது.
20 தடவை மூச்சை இழுத்து வெளியிடுவதை செய்ய
பயன்கள் :
உங்களது இடுப்பு எலும்புகள் நெகிழ்வுத்தன்மை பெறுகிறது
தண்டுவடம் நீட்சியடைகிறது
இதை தினமும் காலையில் செய்தால் உங்களது மனஅழுத்தம் குறைந்து அமைதி மற்றும் சந்தோஷம் மனதில் ஏற்படும்.3.பிரணயாமா(மாற்று மூச்சுப்பயிற்சி) :

3.பிரணயாமா(மாற்று மூச்சுப்பயிற்சி) :

தரை விரிப்பில் அமைதியாக உட்கார்ந்து நீங்கள் மூச்சு விடுதலை கவனியுங்கள். 5 நிமிடங்கள் இயற்கையான காற்றை சுவாசித்து மெதுவாக மூச்சு விடுங்கள்.
கெயன் முத்திரையில் உட்கார வேண்டும். அதாவது வலது அல்லது இடது கையில் உள்ள ஆள்காட்டி விரலானது பெருவிரலை தொடும் படி வைத்து மற்ற விரல்களை நீட்டிக் கொள்ள வேண்டும். (படத்தை பார்த்தால் நன்றாக புரியும்).
இந்த ஆசனம் செய்யும் போது மூச்சை மெதுவாக இரு மூக்குத்துவாரங்கள் வழியாக இழுத்து ஒரு மூக்குத்துவாரங்கள் வழியாக வெளியே விட வேண்டும்.
ஒரு துவாரத்தை பெருவிரல் அல்லது மோதிர விரலால் மூடிக் கொள்ள வேண்டும். மூச்சை ஒவ்வொரு துவாரம் வழியாக மாற்றி மாற்றி விட வேண்டும்
வலது துவாரம் வழியாக மூச்சை இழுத்து அதற்கு இடது துவாரம் வழியாக வெளியிட வேண்டும். இதற்கு பெருவிரல் அல்லது மோதிர விரலால் மூடிக் கொண்டு செய்ய வேண்டும்.
இதையே 5 நிமிடங்கள் செய்ய வேண்டும். எந்த மூக்குத்துவாரங்கள் வழியாக முதலில் மூச்சை வெளியே விட்டமோ அதே துவாரம் வழியாக வெளியிடும் வரை செய்து விட்டு ஆசனத்தை முடித்துக் கொள்ளலாம்.
பயன்கள் :
நுரையீரலின் காற்றின் கொள்ளளவை அதிகரிக்கிறது.
உடலுக்கு தேவையான விழப்புணர்ச்சியை உண்டாக்குகிறது.
மூளையில் சுரக்கும் வலது மற்றும் இடது ஹார்மோன்கள் நன்றாக வேலை செய்ய உதவுகிறது.
உடல் வெப்பநிலையை சீராக்குகிறது. 4.குழந்தை நிலை (பாலாசனம்) :

4.குழந்தை நிலை (பாலாசனம்) :

இந்த ஆசனம் நமது ஒட்டுமொத்த உடலையும் மனஅழுத்தத்திலிருந்து பாதுகாத்து மன அமைதியை தருகிறது.
செய்முறை :
தலையை படுக்கை விரிப்பில் வைத்துக் கொண்டு நன்றாக குனிந்து முழங்கால் போட்டு காலின் மேலே உட்கார்ந்து கொள்ள வேண்டும்.
கைகளை நேராக முன்னே நீட்டிக் கொள்ள வேண்டும். உங்களது நெற்றி குனிந்து தரையை தொட வேண்டும்.
மூச்சை உள்ளே வெளியே மெதுவாக இழுத்து விட வேண்டும். உங்கள் மனதை இது அமைதி படுத்தும்
கொஞ்சம் நேரம் இதே நிலையில் இருக்க வேண்டும்.
பயன்கள் :
மூச்சுப்பயிற்சியை நன்றாக்குகிறது
தண்டுவட நரம்புக்கு விரவு கொடுக்கிறது. மற்றும் நரம்புகளுக்கு இரத்த ஒட்டத்தை அதிகரிக்கிறது.
உள் உறுப்புகளான அடிவயிறு, சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றிற்கு நல்ல மசாஜ் கொடுத்து நன்றாக அவைகள் வேலை செய்ய உதவுகிறது. பாம்பு போன்ற நிலை (புஜங்ஹாசனம்) :

பாம்பு போன்ற நிலை (புஜங்ஹாசனம்) :

இது மிகவும் எளிதான யோகா ஆகும். பின் பகுதியை வளைத்து ரொம்ப கடினமாக இல்லாமல் மெதுவாக மேலே தலையை தூக்கும் நிலை ஆகும். இந்த ஆசனம் உங்களுக்கு காலையில் மன அமைதியையும் நல்ல புத்துணர்வையும் தரும்.
செய்முறை :
தரை விரிப்பில் குப்புற படுத்துக் கொண்டு தலையை மேலே தூக்கி கைகளை முன்புறமாக ஊன்றிக் கொள்ள வேண்டும். இப்பொழுது மூச்சை இழுத்து வெளியே விட வேண்டும்.
கால்கள் மற்றும் தொப்புள் பகுதி போன்றவை தரையில் பதிந்து அப்படியே மெல்ல மெல்ல முதுகை வளைத்து கைகளை ரொம்பவும் தூக்காமல் லேசாக செய்ய வேண்டும்.
பிறகு தலையை மேலே உயர்த்தி முதுகுப்புறமாக வளைத்து கண்கள் மேல் விட்டத்தை பார்க்க வேண்டும். கீழே இறங்கும் போது மெதுவாக மூச்சை எடுத்துக் கொண்டே இறங்க வேண்டும்.
15-30 விநாடிகள் அப்படியே இருக்க வேண்டும்.
பயன்கள் :
தண்டுவடத்திற்கு வலிமை கொடுக்கிறது
கைகள், முன்னங்கைகள், தோள்பட்டை, மணிக்கட்டு போன்றவை வலுப் பெறும்
இதயம் மற்றும் நுரையீரல் வேலையை அதிகரிக்கிறது.
சோர்வு மற்றும் மன அழுத்தத்தை குறைக்கிறது
சியாட்டிகா போன்ற நோயை சரிபண்ணுகிறது.
பின்பகுதியை நிலைப்படுத்தி வலுமையாக்குகிறது.
என்னங்க இந்த ஆசனங்களை உங்கள் காலைப் பொழுதில் செய்து உடல் ஆரோக்கியத்தோடு மன ஆரோக்கியத்தையும் பெறுங்கள்.
புகை பிடித்தல், விளையாட்டாக வாலிபப் பருவத்தில் வந்து, வினையாக வாழ்வை அழிக்கக் கூடியது. இளைய வயதில் ஸ்டைலுக்காக, நண்பர்களின் வற்புறுத்தலால், வரும் இந்தப் பழக்கம் பின் எந்தக் காரணமும் இன்றி புகைக்க வைத்து அடிமையாக்கும்.
சிலரோ நடுத்தர வயதில் வரும் குடும்பச் சுமைகளின் காரணமாக வரும் மனச் சோர்வுக்கு புகைத்தலே, ஆறுதல் என்று இருப்பர்.
காலை எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும்வரை, புகைப் பழக்கமே, துணையாக வாழும் எண்ணற்றோர் இங்கே, உண்டு.How to quit smoking without medication
அரசு ஒவ்வொரு வருட பட்ஜெட்டிலும் எந்தப் பொருட்களின் விலையை உயர்த்துகிறதோ இல்லையோ, நிச்சயம் புகையிலை சார்ந்த பொருட்களின் விலையை உயர்த்தி விடும். ஆயினும், எந்த விலையானாலும் என்ன என்று வாங்கிப் புகைக்கும் புகைஞர்கள் இருக்கையில், அரசுக்கும் அதிக வரி வருவாய் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களும் கொள்ளை லாபங்களில் கொழிக்கின்றன.மீண்டு வர :

மீண்டு வர :

புகை பிடித்தலை, நிறுத்துவது என்பதும் புகை பிடித்தலை விலக்குவது என்பதும் வேறு வேறு. நண்பர்களிடம் பழகிக் கொண்டிருக்கிறீர்கள் அவர்களில் ஒருவர் நடவடிக்கை உங்களுக்குப் பிடிக்கவில்லை, விலகி விடுகிறீர்கள், மீண்டும் அவர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வமோ அல்லது அவர்களிடம் மீண்டும் உரையாட வேண்டும் என்ற எண்ணமோ தேவையோ உங்கள் மனதில் துளி அளவும் இல்லை, இத்தனைக்கும் அவர் உங்களுடன் நல்ல நட்பில் இருந்தவர்தான், ஆயினும் என்ன, அவரின் இன்றைய செயல்கள் யாவும் தீதென உங்களுக்குத் தோன்றி, நீங்கள் விலகி விட்டீர்கள்.
மனதில் உறுதியோடு இருக்கிறீர்கள், அவ்வளவுதான், இனி அவரை எங்கு வேண்டுமானாலும் சந்திக்க நேரலாம், ஆயினும் என்ன, உங்கள் மன உறுதியினால், நீங்கள் அவரை சந்தித்தாலும், முகமன் கூறிவிட்டு விலகி விடுவீர்கள், இதுதானே, நடக்கும், நல்லது. அவ்வளவுதான், இதற்கு மிக்க மன உறுதி மட்டும் தேவை, இப்போது, புகை அரக்கனை முதலில், விலக்க ஒரு புறக் காரணியை துணை கொள்வோம். சூரிய காந்தி விதைகள்:

சூரிய காந்தி விதைகள்:

சூரிய காந்தி மலர்கள், சூரியனை நோக்கி மலரும் பூக்கள், நல்ல மருத்துவ பலன்கள் கொண்ட இந்த மலர்களின் விதைகளே நமக்கு, மிகப்பெரும் அளவில் நன்மை பயக்க வல்லது.
பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட சூரிய காந்தி விதைகளே, நெடுநாளாக இருந்த புகைப் பழக்கத்தை வெல்ல உறுதுணையாகும். சூரியகாந்தி விதைகளை வாயில் போட்டு மென்று வர, சிறிது சிறிதாக, புகை மேல் உள்ள நாட்டம் குறையும்.உலர் திராட்சை :

உலர் திராட்சை :

பிறகு, உலர் திராட்சை அதே போல வாயில்; இட்டு மென்று வர, புகை மெல்ல விலகும்.குப்பை மேனி :

குப்பை மேனி :

இந்தப் புகையிலிருந்து முற்றிலும் விலகி வருவதற்கு. குப்பைமேனி மிளகு கலவை காலையில் சாப்பிட்டு வரலாம், மஞ்சள் மற்றும் வேப்பிலை சில நாட்கள் சாப்பிட்டு வர, உடலில் புத்துணர்வு தோன்றும்.
மன உறுதியைத் தளரவிடாமல் எண்ணிய எண்ணத்தில் உறுதியாக இருக்க குப்பைமேனி போன்ற மகா மூலிகைகள் எல்லாம் நல்ல உதவிகள் செய்யும்.
அட்டையாய் ஒட்டிக்கொண்டு, உங்கள் உடல் நலம் மற்றும் பொருளாதார நலம் பாதித்து, மேலும் உறவுகளில், சமூகத்தில் இருந்து உங்களைத் தனிமைப்படுத்திய அந்த புகை அரக்கனிடமிருந்து மனதின் ஆற்றலால் உறுதியால் முழுமையாக விலகி, புது வாழ்வு வாழலாம்.
உலகில் உள்ள பெரும்பாலான ஆண்களும் பெண்களும் உடலில் ஆற்றல் இல்லாமல் சோர்ந்த நிலையில் இருக்கின்றனர். இதற்குக் காரணம் இன்றைய வாழ்க்கை முறை. நடமாட்டம் இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்க்கும் உலகமாக இந்த உலகம் மாறிவிட்டது. நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் பல்ப், மொபைல் போன், கேட்ஜெட்டுகள் போன்றவை இல்லாததால் சரியான நேரத்திற்கு தூங்கி எழுந்து வேலை பார்த்து வந்தனர். அதனாலேயே நன்கு ஆரோக்கியமாகவும் இருந்தனர்.

ஆனால், இந்த காலத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் மொபைல் போன் மற்றும் கேட்ஜெட்டுகளை உபயோகிப்பது பழகி விட்டது. அவை இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்னும் நிலை ஏற்பட்டுவிட்டு விட்டதால் தூக்கம் இல்லாமல் உடல் நிலை பாதித்து சோர்ந்து காணப்படுகின்றனர்.

ஒரு மனிதனுக்கு முறையாக 7 மணி நேரம் சரியான தூக்கம் இருந்தாலேயே நல்ல ஆரோக்கியமாக வாழ முடியும். அப்படி 7 முதல் 9 ணி நேரம் தூங்கி எழுந்தாலும் சிலர் சோர்வாக தான் காணப்படுகிறார்கள். இவ்வாறு ஏற்படுவதற்கு அந்த 7 மணி நேரத் தூக்கம் முறையான தூக்கமாக இல்லாதது காரணமாக இருக்கலாம். அப்படி சோர்வாக உணர்வதற்கான 4 முக்கிய காரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம் வாருங்கள்...

Here is the reasons why you are always tired உடல் உழைப்பின்றி இருப்பது
இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் கணினி சம்மந்தப்பட்ட வேலைகளை பார்ப்பதால் நாள் முழுவதும் உட்கார்ந்து கொண்டே இருக்கும் சூழ்நிலை இருக்கிறது. இதற்காக தினமும் 1000 படிகள் ஏறி இறங்குவது, நிறைய தூரம் நடப்பது என்றெல்லாமல் தேவை இல்லை. நிறைய நேரம் உட்கார்ந்திருப்பது உடலில் சோர்வினையும், மூட்டு எலும்புகளில் வலியையும், இடுப்பு வலியையும், நாள்ப்பட்ட தலைவலியையும் ஏற்படுத்தக்கூடும். இது ஆரோக்கியமான வாழ்நாளை குறைத்துவிடும். இவற்றிற்கு வழி என்னவென்றால், நிறைய நேரம்உட்கார்ந்திருக்கும் தருணத்தில் சிறிது நேரம் எழுந்து நடப்பது, அதாவது, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து 10 நிமிடம் நடக்கலாம், மாடிப்படி ஏறி இறங்கலாம், அருகில் இருப்பவருடன் நடந்து கொண்டே சிறிது பேசலாம். இவை எல்லாம் நீண்ட நேரம் உட்காருவதால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்யக்கூடும்.
முறையற்ற உணவு பழக்கம்
சர்க்கரை அதிகமுள்ள உணவுகள், சுகாதாரமற்ற உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உண்ணும் பழக்கம் உடையவராக இருந்தால் அதை முதலில் விடுங்கள். இதுவே உடலுக்கு முறையான தூக்கத்தை தரக்கூடியது. ஒரு வேலை நீங்கள் அனைத்து உணவு வகைகளையும் முறையாகவும் சரியாகவும் எடுத்துக்கொண்டாலும் சோர்வாக உணர்ந்தால் உங்களுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்று அர்த்தம். அந்த தருணங்களில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடலாம்.Here is the reasons why you are always tired தரமற்ற தூக்கம்
பெரும்பாலோர் 7 முதல் 9 மணி நேரங்கள் நிம்மதியாக தூங்குகிறார்கள். இருப்பினும் அவர்கள் காலையில் எழும்போது சோர்வாகவும், மந்தமாகவும் உணர்கிறார்கள். இதற்குக் காரணம் தூக்க சுழற்சி சரியாக இல்லாதது. ஒரு வழக்கமான தூக்க சுழற்சியை 75 முதல் 90 நிமிடங்கள் வரை REM மற்றும் REM இல்லாத தூக்கம் மற்றும் பிற நிலைகள் இடையே அமையும். இந்த நிலைகளில் ஒவ்வொன்றும் உங்கள் உடலை புதுப்பித்துக்கொள்வதற்கு மற்றும் நச்சுத்தன்மையை நீக்க உதவுவதற்காகவும் செயல்படக்கூடியது. தரமற்ற தூக்கத்திற்கு முக்கிய காரணங்கள் மன அழுத்தம், ஒழுங்கற்ற உணவு பழக்கம், நீண்ட நேரம் தூங்காமல் இருப்பது, ஆல்கஹால் குடிப்பது, ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, இரவில் அதிக நேரம் வெளிச்சத்தில் இருப்பது போன்றவை.
இவற்றில் இருப்பது தப்பிக்க அதிகாலை சூரிய வெளிச்சம் உடலில் பட செய்வது, மதிய வேலையில் காஃபின் அளவு சேர்ப்பதை குறைப்பது, எலெக்ட்ரிக் உபகரணங்கள் உபயோகிப்பதை தவிர்ப்பது, புத்தகங்கள் மற்றும் பத்திரிக்கைகள் படிப்பது போன்றவற்றை மேற்கொள்ளலாம்.Here is the reasons why you are always tired மன அழுத்தம்
வேலையிலும், தொழிலும், எதிர் காலத்திலும் அதிக அக்கறை செலுத்தி உடலை கவனித்துக் கொள்ளாமல் இருப்பவர்கள் பலரை பார்த்திருப்பீர்கள். அப்படிப்பட்டவர்களை பார்க்கும போது நீங்களே தெரிந்துக்கொள்ளலாம் அவர்களின் தூக்கம் கெட்டு உடல் சற்று சோர்வாகவே காணப்படும். தூக்கத்தை கெடுத்துக்கொண்டு தொழிலை கவனிப்பதால் கிடைக்கும் பலன் மனஅழுத்ததின்ல் உருவான உடல் சோர்வு. இந்த காலத்து ஆண்களும பெண்களும் பெரும்பாலும் மருத்துவரை அணுகுவது மப அழுத்தத்தை சரி செய்வதற்காக மட்டுமே. இவற்றை போக்கும் வழியாக அமைவது தியானம், யோகா, மசாஜ் மற்றும் இயற்கை காற்றில் நடமாடுவது போன்வறை. மேலும், மொபைல் போனை சற்று தொலைவில் வைத்துவிடுங்கள்.
http://go.oclasrv.com/afu.php?zoneid=1508851

பொதுவாக வாதம், மாரடைப்பு, இதய நாளம் சம்மத்தப்பட்ட இதய நோயாளர்களின் இதய நாளங்களில் ரத்தம் உறைதலை தடுக்கவும், ரத்தத்தின் அடர்த்தியை குறைத்து சீரான ரத்த ஓட்டத்தை தொடரவும் டாக்டர்களால் பரிந்துரைக்கப்படுவது ஆஸ்பிரின் மாத்திரை. அப்படியாக கொடுக்கப்படும் ஆஸ்பிரின் வகை மருந்துகள் சில பக்க விளைவுகளையும் கொண்டுள்ளது என்று சில புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
அதிலும் குறிப்பாக வயதானவர்கள் இரப்பை மற்றும் அதை சார்ந்த குடல் பகுதிகளில் ரத்தக் கசிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள என தெரியவந்துள்ளது. இதில் கூட்டு மருந்தாக கொடுக்கப்படும் ப்ரோட்டான் பம்ப் இன்ஹிபிடர்ஸ் மற்றும் நெஞ்செரிச்சலுக்காக கொடுக்கும் மருந்துகளோடு ஆஸ்பிரினும் கொடுக்கப்படும் போது ரத்த கசிவு குறைந்து குறிப்பிட்டளவு மாற்றம் ஏற்படுகிறது என்பதும் தெரிய வருகிறது.Risk of bleeds and death with daily aspirin use higher ஒவ்வொரு வருடமும் லண்டனில் மட்டும் சுமார் 20,000பேர் வரை ரத்தக் கசிவினாலும், அதிலும் தோராயமாக சுமார் 3,000 பேர் வரை ரத்தக் கசிவால் இறக்க நேர்ந்துள்ளதாக பல்வேறு வெளிவட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் சில ஆய்வுப்படி இந்த எண்ணிக்கை உண்மையாக இருக்கவேண்டியதில்லை என்றே உணரப்படுகிறது.
இந்த ஆய்வில் இணைந்து செயல்பட்ட பீட்டர் ரூத்வெல் கூறுகையில், ஆஸ்பிரின் எடுத்துக்கொள்வதால் ஏற்படுவதாக குறிப்பிடப்படும் ரத்தக்கசிவு நோயாளிகளின் எண்ணிக்கை நம்ப முடியாத அளவுக்கு மிகைப்படுத்தப்படுகிறது என நான் ஒவ்வொரு பத்திரிகையாளர் சந்திப்பின்போதும் தெரிவித்துக்கொண்டு தான் இருக்கிறேன். ஆனாலும் அந்த தகவல்கள் வெளி உலகத்துக்கு சரியாக போய்சேரவில்லை.Risk of bleeds and death with daily aspirin use higher இந்த தகவல் உரிய இடங்களுக்கு சென்றடையாதது என் குற்றமல்ல ஆனாலும் பத்திரிக்கையாளர்களையும் குறை சொல்லமாட்டேன்,இதை தகவல் பரிமாற்றத்தின் குற்றமாக வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம் என்றார் லண்டனில் ரூத்வெல். அவரது குழுவினர் டாக்டர்களால் பரிந்துரைத்த ஆஸ்பிரினை தினமும் எடுத்துக்கொள்ளும் போது, பக்கவாதம் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்ட 3116 பேரை பின் தொடர்ந்து கவனித்ததில் ஒரு நிலைக்குப்பின் சுமார் 314 நோயாளிகள் ரத்தக்கசிவு நோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
இது கண்காணித்த மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் 10 % ஆகும். அதிலும் குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்ட வயோதிகர்களே இன் நோயால் அதிகம் பாதிப்படைகின்றனர் என கண்டறியப்பட்டது. இதில் 65 வயதுக்குட்பட்டோர் 0.5% என்ற ஆபத்து நிலையிலும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2.5 %என்ற ஆபத்து நிலையிலும் இருப்பது கண்டறியப்பட்டது.Risk of bleeds and death with daily aspirin use higher ஆஸ்பிரின் மற்றும் அது தொடர்புடைய மருந்துகள் இதய அடைப்புகளால் வரும் மாரடைப்பு மற்றும் மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகளால் வரும் பக்கவாதம் போன்றவற்றை தடுப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. இம்மருந்தை நடுநிலை கொண்டு கவனித்தால் இம்மருந்தை பயன்படுத்தும்போது ரத்தம் உறைதல் தடுக்கப்பட்டு இதய தமனிகளுக்கு சீராக ரத்த ஓட்டம் ஏற்பட வழிவகை செய்கிறது அதே சமயம் ரத்தம் உறைதல் தடுக்கப்படுவதால் எதிர்பாராவிதமாக ரத்தக் கசிவு ஏற்படும் போது உடனடியாக அதை நிறுத்துவதில் சிரம நிலை ஏற்படுகிறது.
அப்பொழுதும் ரூத்வெல் பிடிவாதமாக மாரடைப்பை விட ரத்தக்கசிவு ஆபத்து குறைவு என்ற வகையில் ஆஸ்பிரினை தொடர்ந்து எடுத்துக்கொள்வதில் தவறில்லை என குறிப்பிடுகிறார். மேலும் அவர் குறிப்பிடுகையில் மாரடைப்பு மற்றும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட 75 வயதிற்குற்பட்டவர்கள் தங்கள் பாதுகாப்புக்காக ஆஸ்பிரின் மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம் என்று குறிப்பிடுகிறார்.மேலும் ஆய்வுகளின் படி ஆஸ்பிரினோடு கூட்டு மருந்தாக எடுத்துக்கொள்ளும் ப்ரோட்டான் பம்ப் இன்ஹிபிடர்ஸ் (ppi)ரத்தக்கசிவை வெகுவாக குறைக்கும் தன்மைகொண்டது என்பதையும் முக்கியமாக குறிப்பிடுகிறார்.Risk of bleeds and death with daily aspirin use higher மேலும் இந்த ஆய்வை ஒத்துக்கொள்ளும் ஷெபீல்டு யுனிவர்சிட்டியை சேர்ந்த டாக்டர் சிம் "புற்றுநோய் மற்றும் மாரடைப்பு வராமல் தடுக்கும் நோக்கோடு முன்கூட்டியே இந்த ஆஸ்பிரின் மருந்தை எடுத்துகொள்பவர்கள் தயவுசெய்து தங்களது டாக்டர்களிடம் போய் ஆலோசனை பெற்று மருந்தை எடுத்துக்கொள்ளுங்கள்" என பரிந்துரைக்கிறார்.
ஏனெனில், ரத்தம் உறையாததற்கான சிகிச்சை முறையிலும் ஆபத்து அதிகம் என்கிறார். இந்த பின்விளைவுகள் பெரும்பாலும் வயதானவர்களுக்கும் மிகவும் வயதானவர்களுக்கு மட்டும்தான் எனும் போது மற்ற நோயாளிகளுக்கு ஆஸ்பிரின் நம்பிக்கையளிப்பதாக உள்ளது. மேலும் ரத்த கசிவுக்கும் ஆஸ்பிரினுக்குமான தொடர்பை கவனித்த ஈஸ்ட் ஆங்கிலியா பல்கலைகழகத்தை சேர்ந்த டாக்டர் யூன் லோக் "இது தவிர்க்க முடியாத அதே சமயம் வேறுவழியே இல்லாமல் வரவேற்கவேண்டிய மருத்துவ சிகிச்சை முறை" என்கிறார்.
மேலும் அவர் கூறுகையில் "மாரடைப்பு, பக்கவாதம் வந்தவர்கள் மறுபடியும் அதுபோல் வராமலிருக்க ஆஸ்பிரின் எடுத்துக்கொளும்போது குடல் சார்ந்த ஏற்படும் சிறிய ரத்தக்கசிவை பெரிது படுத்தாமல் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தை தடுக்கிறோம் என்ற பெரிய நன்மையையே கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்" என்றார். மேலும், ஊடகங்களுக்கு தெரிவிக்கையில் "பக்கவாதம் மற்றும் மாரடைப்பிற்கு பின் ஆஸ்பிரின் மிகச்சிறந்த மருந்து ஆனாலும் ரத்தக்கசிவு போன்ற அதன் பக்க விளைவுகளை சந்தித்துத்தான் ஆகவேண்டும்" என்றார்.

யோகா என்பது நமது உடலையும் மனதையும் புத்துணர்ச்சியோடு வைக்கும் பயிற்சி ஆகும். ஆனால் காலம் நேரமும் ஓடும் இவ்வாழ்க்கையில் யோகா பயிற்சி என்பது...